< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆசிரியர் தேர்வு முறைகேடு; மண்டல உதவியாளர் பணி இடைநீக்கம்
|13 Sept 2022 10:01 PM IST
ஆசிரியர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மண்டல உதவியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு கடந்த 2012-13 மற்றும் 2014-15-ம் ஆண்டுகளில் நடைபெற்றது. இதில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் இதுதொடர்பாக விதான சவுதா போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவாகின. இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள், தேர்வர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.ஐ.டி. போலீசாார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இந்த தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக முதன்மை மண்டல உதவியாளராக பணியாற்றி வரும் பிரசாத் என்பவரை விசாரணைக்காக கைது செய்தனர். இதையடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்து, உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.