< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் என்.ஐ.ஏ. சோதனை
|29 Aug 2024 2:21 AM IST
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது.
கொச்சி,
கேரளா மாநிலம் கொச்சியில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு ஒரு கப்பலின் பாதுகாப்பு ரகசியங்கள் தொடர்பானவை வெளியே கசிந்ததாக சந்தேகம் எழுந்து உள்ளது.
இந்தநிலையில் ஐதராபாத்தில் இருந்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு வந்து திடீரென சோதனை நடத்தினர். கடற்படை ஊழியர்கள் வசிக்கும் அலுவலக குடியிருப்புகள், கப்பல் கட்டும் தளத்தில் சோதனை மேற்கொண்டனர்.
என்.ஐ.ஏ. சோதனையை அடுத்து, சந்தேகத்தின் பேரில் ஒப்பந்த ஊழியர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.