< Back
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் பல வழக்குகளில் தேடப்பட்ட குற்றவாளி என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பல வழக்குகளில் தேடப்பட்ட குற்றவாளி என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

தினத்தந்தி
|
28 Jun 2023 4:02 AM IST

குப்ரான் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி குப்ரான். 12-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியான அவனது தலைக்கு ரூ.1¼ லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான். இந்த நிலையில் கவுசாம்பி மாவட்டத்தின் சம்டா கிராம பகுதியில் ரவுடி குப்ரான் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சிறப்பு போலீஸ் படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

அப்போது குப்ரான் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதனால் போலீசாரும் பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த என்கவுன்ட்டரில் குப்ரான் குண்டு பாய்ந்து காயம் அடைந்தான். அவனை மாவட்ட ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தபோது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். குப்ரான் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன.

மேலும் செய்திகள்