பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம்... சிறுபிரச்சினைக்காக தவறான முடிவெடுத்த காதலர்கள்
|காதலர்களான மோனிகா, மனு ஆகிய இருவருக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க இருந்தது.
மைசூரு,
மைசூரு டவுன் மண்டக்கள்ளி பகுதியை சேர்ந்தவர் மோனிகா(வயது20). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் மோனிகாவுக்கும், ஜோதி நகரை சேர்ந்த மனு(22) என்பவருக்கும் இடையே பழக்கும் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதையத்து இவர்கள் 2 பேரும் செல்போன் மூலம் பேசி வந்தனர். மோனிகா தனது காதலை வீட்டில் தெரிவித்துள்ளார். அதற்கு அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதேப்போல், மனு வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து மோனிகா, மனு ஆகியோருக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க இருந்தது.
இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மோனிகா, மனு இடையே சிறுபிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் பேசி கொள்ளவில்லை. சம்பவத்தன்று மோனிகா மனுவின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். ஆனால்,அவரின் அழைப்பை மனு எடுக்கவில்லை. இந்தநிலையில், மோனிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குவெம்பு நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மோனிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.ஆர்.ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்த மனு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் மனுவும் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் குவெம்புநகர், நஜர்பாத் ஆகிய போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மைசூரு அருகே காதலி இறந்த அதிர்ச்சியில், அடுத்த சில மணி நேரத்திலேயே காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.