< Back
தேசிய செய்திகள்
பீகாரில் ஆச்சரியம்; அரசு பள்ளியில் மாணவர்களுடன் சீருடையில் ஆசிரியர்கள்
தேசிய செய்திகள்

பீகாரில் ஆச்சரியம்; அரசு பள்ளியில் மாணவர்களுடன் சீருடையில் ஆசிரியர்கள்

தினத்தந்தி
|
11 July 2022 3:02 AM GMT

பீகாரில் உள்ள அரசு நடுநிலை பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் ஆசிரியர்களும் சீருடை அணிந்து பள்ளிக்கு செல்வது ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.



கயா,



பீகாரில் கயா மாவட்டத்தில் பங்கி பஜார் பகுதியில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த இந்த பகுதியில் அமைந்த அரசு பள்ளியில் வகுப்புகளுக்கு மாணவ மாணவியர்களுடன், ஆசிரியர்களும் சீருடை அணிந்து செல்லும் நடைமுறை காணப்படுகிறது.

இந்த பள்ளியின் முதல்வர் நாகேஷ்வர் தாஸ் இதுபற்றி கூறும்போது, பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் சமையல் பணியாளர்கள் என அனைவரையும் ஒன்றாக அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தினோம்.

அதில், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர் மட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களும் சீருடை அணிந்து வருவது என நாங்கள் முடிவு செய்தோம். அதற்காக, என்னுடைய தனிப்பட்ட நிதி தொகுப்பில் இருந்து முதல் சீருடை செட் ஒன்றை வழங்க நான் முடிவு செய்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால், அந்த அரசு பள்ளியில் மாணவர்களுடன், ஆசிரியர்களும் சீருடை அணிந்து காணப்படுகின்றனர். படிக்கும்போது, மாணவ மாணவியர் இடையே வேற்றுமை ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக சீருடை அணியப்படும் நடைமுறையானது வழக்கத்தில் உள்ள சூழலில், ஆசிரியர்களும் சீருடை அணிந்து செல்வது அந்த பகுதியில் உள்ளோரிடையே ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்