< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
முன்னாள் ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை; விமானப்படை விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட 'கல்லீரல்'
|25 Feb 2024 3:48 PM IST
முன்னாள் ராணுவ வீரருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் முன்னாள் ராணுவ வீரர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள புனேவில் இருந்து கல்லீரலை கொண்டு வர இந்திய விமானப்படை உதவி செய்துள்ளது.
இது குறித்து இந்திய விமானப்படை 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 23-ந்தேதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான டார்னியர் விமானத்தில் புனேவில் இருந்து கல்லீரலை எடுத்துக் கொண்டு மருத்துவ குழுவினர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.