< Back
தேசிய செய்திகள்
ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடியை எச்சரித்த சுப்ரீம் கோர்ட்டு
தேசிய செய்திகள்

ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடியை எச்சரித்த சுப்ரீம் கோர்ட்டு

தினத்தந்தி
|
24 April 2023 5:42 PM IST

ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்துள்ளது.

புதுடெல்லி,

ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்துள்ளது.

நீதித்துறை தொடர்பாக அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக, ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

இந்த விவகாரத்தில் லலித் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி இருந்த நிலையில், அதனைப் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது. நீதித்துறை குறித்து எதிர்காலத்தில் அவமதிப்பு கருத்துகளை தெரிவிக்கக்கூடாது என்றும் லலித் மோடிக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்