< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்படுமா? - சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு
|12 May 2023 1:42 AM IST
ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்படுவது தொடர்பாக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி,
ஒரே பாலின ஜோடிகள் தங்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். அவற்றை விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வு 10 நாட்களாக இருதரப்பு வாதங்களை கேட்டறிந்தது.
மத்திய அரசு தரப்பு, ''ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கக்கூடாது. கோர்ட்டு எந்த அரசியல் சட்ட பிரகடனம் வெளியிட்டாலும், அது சரியான நடவடிக்கை அல்ல. மாநில அரசுகளும் இத்திருமணத்தை எதிர்க்கின்றன. சிக்கலான அப்பிரச்சினையை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும்'' என்று வாதிட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் விசாரணை முடிவடைந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.