< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நன்கொடை நிலங்களில் ஆக்கிரமிப்பை கண்டறிய உத்தரவிடக்கோரும் மனு - விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
|1 March 2023 3:50 AM IST
நன்கொடை நிலங்களில் ஆக்கிரமிப்பை கண்டறிய உத்தரவிடக்கோரும் மனு மீதான விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த வாமன் ஸ்ரீனிவாஸ் பிரபு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். அதில், மத நிறுவனங்கள், கல்வி அமைப்புகள், அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட நிலங்களில் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
அந்த ரிட் மனு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்ததுடன், ஐகோர்ட்டை நாட சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. மனுவை திரும்பப்பெற அனுமதியளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.