< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
|12 Jan 2024 12:13 PM IST
தமிழ்நாடு அரசுக்கு பிரச்சனை இருந்தால் அவர்கள் முறையிடுவார்கள் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
புயல், மழை வெள்ள பாதிப்பால் கடும் பாதிப்பை சந்தித்த தமிழ்நாட்டுக்கு ரூ.8,000 கோடி நிவாரணம் வழங்கவும், அதில் ரூ.3,000 கோடியை இடைக்கால நிவாரணமாக உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரிய மனுவை விசாரிக்க முடியாது என்றும், இந்த பிரச்சனையில் தலையிட முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
"தமிழ்நாடு அரசுக்கு பிரச்சனை இருந்தால் அவர்கள் முறையிடுவார்கள். இது நிர்வாகம் சம்மந்தப்பட்டது, அதை தமிழ்நாடு அரசே பார்த்துக் கொள்ளும். நீங்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.