< Back
தேசிய செய்திகள்
முதியோர் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

முதியோர் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
7 Oct 2022 3:30 AM IST

முன்னாள் மத்திய மந்திரி அஸ்வினி குமார் சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி அஸ்வினி குமார் சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'நாடு முழுவதும் அடிப்படை வசதிகளுடன் முதியோர் இல்லங்களை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் அனிருதா போஸ், சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், 'முதியோர்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்ட விவரங்கள், குறிப்பாக, முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, மாவட்டந்தோறும் அமைந்துள்ள முதியோர் இல்லம், மூப்பியல் மருத்துவ நிலை, மூத்த குடிமக்கள் பராமரிப்பு, நலச்சட்ட அமலாக்கத்தின் நிலை ஆகியவற்றையும், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

இதனையடுத்து மனு மீதான விசாரணையை ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்