< Back
தேசிய செய்திகள்
மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
தேசிய செய்திகள்

மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

தினத்தந்தி
|
27 Sep 2023 10:52 AM GMT

எல்.முருகன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

வேலூரில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சமி நிதி குறித்து பேசியதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும் அவதூறு வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் எல்.முருகன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக 6 வாரங்களில் பதிலளிக்க முரசொலி அறக்கட்டளைக்கு உத்தரவிட்டதோடு, எல்.முருகன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்