< Back
தேசிய செய்திகள்
மே.வங்கத்தில் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: சி.பி.ஐ விசாரணைக்கு தடை
தேசிய செய்திகள்

மே.வங்கத்தில் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: சி.பி.ஐ விசாரணைக்கு தடை

தினத்தந்தி
|
29 April 2024 7:47 PM IST

மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் பணிநீக்க விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்தா கொல்கத்தா ஐகோர்ட்டு 2016-ம் ஆண்டுக்கு பிறகு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட 26 ஆயிரம் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை அளிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டு இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர்கள் பணி நீக்கம் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

மேலும் செய்திகள்