< Back
தேசிய செய்திகள்
ஆண்-பெண் திருமண வயது, வாரிசுரிமைக்கு ஒரே சட்டம் உருவாக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஆண்-பெண் திருமண வயது, வாரிசுரிமைக்கு ஒரே சட்டம் உருவாக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

தினத்தந்தி
|
30 March 2023 12:38 AM IST

ஆண்-பெண் திருமண வயது, வாரிசுரிமைக்கு ஒரே சட்டம் உருவாக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்குமார் உபாத்தியாயா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் விவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஜீவனாம்சம், ஆண்-பெண் திருமண வயது ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்னும் சிலரும் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'இந்த விவகாரம் நாடாளுமன்றம், சட்டமன்ற அதிகாரவரம்புக்குள் வருவதால் விசாரணைக்கு ஏற்கக்கூடாது' என வாதிட்டார்.

இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 'இந்த விவகாரம் நாடாளுமன்ற, சட்டமன்ற அதிகாரம் வரம்புக்குள் வருவதால் விவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஜீவனாம்சம், ஆண்-பெண் திருமண வயது ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட முடியாது' என தெரிவித்து மனுக்களை முடித்து வைத்தது.

மேலும் செய்திகள்