< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கனிமொழியின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யக்கோரிய வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி
|14 Sept 2024 8:00 PM IST
கனிமொழியின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யக்கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த வேட்புமனுவில், அவரது கணவரின் வருமானத்தை தெரிவிக்கவில்லை என்றும், எனவே அவரது வெற்றியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சந்தானகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி சந்தானகுமார் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கில் மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவை எழவில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.