'விவிபாட்' வழக்கு: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
|மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துள்ளது.
புதுடெல்லி,
தேர்தல்களில் 'விவிபாட்' எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களில் ஏதேனும் சில எந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ணி, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகளுடன் சரிபார்க்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் 3 அமைப்புகள் மனுக்கள் தாக்கல் செய்தன.
இம்மனுக்களை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களாக பரபரப்பு வாதங்கள் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட்டு, தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தது. அதன்படி,இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆணையத்தை கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பதும் சந்தேகத்திற்கு வழிவகுக்கும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.