< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு
|26 Aug 2022 9:38 AM IST
சுப்ரீம் கோர்ட்டின் 48வது தலைமை நீதிபதியான என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி பொறுப்பேற்றார். இவரது பணிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.
இதனை தொடர்ந்து, புதிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை, ஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரமணா மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நாளை பொறுப்பேற்கிறார்.
அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.