< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க ஒப்புதல்
|13 July 2022 11:57 AM IST
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்ரமணியன் சாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
டெல்லி,
இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியில் ராமர் பாலம் இருப்பதாக கருதப்படுகிறது. சீதையை மீட்க ராமர் இலங்கை செல்வதற்கு வசதியாக வானர சேனைகள் இந்த பாலத்தை கட்டியதாக நம்பப்படுகிறது. இந்த பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாமல், மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதாக 13 ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதி அளித்தது.
இதற்கிடையே, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரி, பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்
இந்த நிலையில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்ரமணியன் சாமி தாக்கல் செய்த மனு வரும் 26-ம் தேதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் வழங்கியுள்ளது.