" உங்களைபோல் அல்ல" எதை விரும்புகிறேனோ அதை வெளிப்படையாகவே செய்வேன் நடிகை ரோஜாவுக்கு சன்னி லியோன் கண்டனம்
|ஆந்திர மந்திரி ரோஜா பவன் கல்யாண் மற்றும் சன்னி லியோன் குறித்து மீண்டும் ஒருமுறை கடுமையாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அமராவதி
பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒரு முன்னாள் ஆபாச நட்சத்திரமாக இருக்கலாம், ஆனால் அது கடந்த காலம். தற்போது பாலிவுட் கதாநாயகியாக தனது வாழ்க்கையைத் தொடர்கிறார். இவரை ஆபாச நட்சத்திரம் என்று கேலி செய்தவர்கள், பின்னாளில் அவருடன் நடித்து வாய்ப்பு கொடுத்து ஊக்கப்படுத்தினர்.
குழந்தைகளை தத்தெடுப்பது மட்டுமின்றி, தொண்டு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார் ,
ஆந்திர மந்திரி ரோஜா பவன் கல்யாண் மற்றும் சன்னி லியோன் குறித்து மீண்டும் ஒருமுறை கடுமையாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
ஆந்திராவில் பவன் கல்யாண் தனது வாராஹி யாத்திரையின் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்தார்.
பவன் ஒழுக்கம் குறித்து சன்னி லியோனுடன் ஒப்பிட்டு கூறினார். ரோஜா, பவனை திட்டும் கோபத்தில், சன்னி லியோனை இழுத்தார்.பவன் கல்யாண் வந்து ஜெகனுக்கு கற்றுக்கொடுக்கிறார்.இது சன்னி லியோன் வேதம் ஓதியது போல் உள்ளது என கூறி உள்ளார்.
இதற்கு உடனடி எதிர்வினை ஏற்பட்டது. மந்திரி ரோஜாவுக்கு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக பவன் கல்யாண் ரசிகர்கள் சன்னி லியோனுக்கு ஆதரவு தெரிவித்தும், மந்திரி ரோஜா குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தன் மீதான விமர்சனத்திற்கு சன்னி லியோன் வீடியோ ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அதில் நான் ஒரு ஆபாச நட்சத்திரம். ஆனால் எனது கடந்த காலத்தை நினைத்து நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. உங்களைபோல் அல்லாமல் நான் எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை வெளிப்படையாகவே செய்வேன்.
ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நான் ஆபாச பட உலகை விட்டு வெளியேறினேன்.. ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை.
என கூறி உள்ளார் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது. இதை எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றன. இதற்கு ரோஜா பதில் சொல்வாரா என்று பார்ப்போம்.