< Back
தேசிய செய்திகள்
வருகிற 5-ந்தேதி நடிகர் அபிஷேக்- அவிவா திருமணம்; நடிகை சுமலதா எம்.பி. தகவல்
தேசிய செய்திகள்

வருகிற 5-ந்தேதி நடிகர் அபிஷேக்- அவிவா திருமணம்; நடிகை சுமலதா எம்.பி. தகவல்

தினத்தந்தி
|
30 May 2023 12:15 AM IST

வருகிற 5-ந்தேதி நடிகர் அபிஷேக்-அவிவாவின் திருமணம் நடைபெற இருப்பதாக நடிகையும், அபிஷேக்கின் தாயுமான சுமலதா எம்.பி. தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கன்னட திரையுலகின் ரீபெல் ஸ்டார் என்று அழைக்கப்படுவர், மறைந்த நடிகர் அம்பரீஷ். நேற்று இவரது 71-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவரது மனைவியும், எம்.பி.யுமான நடிகை சுமலதா, மகன் அபிஷேக் மற்றும் அம்பரீசின் ரசிகர்கள் பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் அம்பரீசின் நினைவிடத்தில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நடிகை சுமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-

மகன் அபிஷேக்கின் திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. ஜூன் 5-ந்தேதி அபிஷேக்கிற்கும், அவிவாவுக்கும் திருமணம் நடக்கிறது. ஜூன் 7-ந்தேதி வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிட்டு உள்ளோம். ஆனால் அம்பரீஷ் இன்று நம்முடன் இல்லை. அவரை ரொம்ப மிஸ் செய்கிறேன். திருமணத்திற்கு பலருக்கும் அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம். அவர்கள் அனைவரும் எங்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் தான். பிரதமர் மோடி அபிஷேக்கின் திருமணத்திற்கு வருவாரா இல்லையா என்பது தெரியாது. திருமணத்தையொட்டி அபிஷேக்- அவிவா நடனமாடிய வீடியோவை வெளியிடுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்