< Back
தேசிய செய்திகள்
இமாசலபிரதேச முதல்-மந்திரியாக சுக்விந்தர்சிங் சுக்கு பதவி ஏற்றார்
தேசிய செய்திகள்

இமாசலபிரதேச முதல்-மந்திரியாக சுக்விந்தர்சிங் சுக்கு பதவி ஏற்றார்

தினத்தந்தி
|
11 Dec 2022 2:19 PM IST

இமாசலபிரதேச மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக சுக்விந்தர்சிங் சுக்கு பதவி ஏற்றுக் கொண்டார்

சிம்லா,

இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை சென்ற 8-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

இதனையடுத்து, சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக (முதல்-மந்திரியாக) சுக்விந்தர் சிங் சுக்குவும் (வயது 58), துணை முதல்-மந்திரியாக முகேஷ் அக்னிகோத்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இமாசலபிரதேச மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக சுக்விந்தர்சிங் சுக்கு பதவி ஏற்றார். துணை முதல்-மந்திரியாக முகேஷ் அக்னிகோத்ரி பதவி ஏற்றார். அவர்களுக்கு கவர்னர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்