< Back
தேசிய செய்திகள்
இமாச்சல பிரதேச முதல்-மந்திரியாக சுக்விந்தர் சிங் சுகு இன்று பதவியேற்பு
தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேச முதல்-மந்திரியாக சுக்விந்தர் சிங் சுகு இன்று பதவியேற்பு

தினத்தந்தி
|
11 Dec 2022 9:26 AM IST

இமாச்சல பிரதேச முதல்-மந்திரியாக சுக்விந்தர் சிங் சுகு இன்று பதவியேற்கிறார்.

சிம்லா,

68 இடங்களை கொண்டுள்ள இமாசலபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகின. இமாசலபிரதேச மாநிலத்தில் 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் என்ற சரித்திரம், இந்த முறையும் மாறவில்லை; தொடருகிறது.

குஜராத்தில் சாதனை வெற்றி பெற்ற பா.ஜ.க. இங்கு ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கிறது. 68 இடங்களில் 35 இடங்களில் வெற்றி பெற்றாலே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

பா.ஜ.க. 25 இடங்களில் வெற்றிக்கனி பறித்துள்ளது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்தநிலையில், சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்தில் , சுக்விந்தர் சிங் முதல்-மந்திரியாக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தநிலையில், சுக்விந்தர் சிங் முதல்-மந்திரியாக இன்று காலை பதவியேற்க உள்ளார். துணை முதல்-மந்திரியாக முகேஷ் அக்னிஹோத்ரியும் பதவியேற்கிறார்.

மேலும் செய்திகள்