< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் வரதட்சணை கொடுமை, சாதி பாகுபாட்டால் பெண் தற்கொலை; கணவர் உள்பட 3 பேர் கைது
தேசிய செய்திகள்

கேரளாவில் வரதட்சணை கொடுமை, சாதி பாகுபாட்டால் பெண் தற்கொலை; கணவர் உள்பட 3 பேர் கைது

தினத்தந்தி
|
13 July 2022 4:42 AM IST

கேரளாவில் வரதட்சணை கொடுமை, சாதி பாகுபாட்டால் தற்கொலை செய்த பெண்ணின் கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.



கொச்சி,



கேரளாவின் திருச்சூரில் குன்னம்குளம் பகுதியில் வசித்து வந்த தம்பதி சுமேஷ் மற்றும் சங்கீதா. கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரலில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களில் சங்கீதா தலித் பிரிவை சேர்ந்தவர். சுமேஷ் ஈழவா பிரிவை சேர்ந்தவர்.

இந்நிலையில், எர்ணாகுளம் மத்திய போலீசார் கூறும்போது, சங்கீதாவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியும், சாதி பாகுபாடு செய்தும் வந்துள்ளனர். இந்த கொடுமை பொறுக்க முடியாமல், அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

திருமணம் முடிந்த 2 வாரத்தில் கொச்சியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், இந்த கொடுமை ஆரம்பித்துள்ளது என போலீசார் கூறுகின்றனர். சங்கீதா பயன்படுத்த தனியான தட்டு, தம்ளர் கொடுக்கப்பட்டு உள்ளது.

அவரது பெற்றோர் வரதட்சணை கொடுக்காத நிலையில், அவரை தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை பார்க்க, நாற்காலியில் அமர கூட விடவில்லை. இதன்பின்னர் சுமேஷ் அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டுள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த சூழலில், தற்கொலை செய்த பெண்ணின் கணவர், அவரது தாயார் ரமணி மற்றும் சுமேஷின் உறவினரான மணீஷா என்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்