< Back
தேசிய செய்திகள்
உப்பள்ளியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

உப்பள்ளியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
26 May 2022 9:05 PM IST

மது அருந்தும் பழக்கத்தை உறவினர்கள் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை,

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் கல்கட்டகி தாலுகா ஜி.பசனகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தப்பா. இவரது மகன் கங்கப்பா (வயது 35). கூலி தொழிலாளி. இவர் அளவுக்கு அதிகமாக மதுஅருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது.


இதனால் மது அருந்தும் பழக்கத்தை கைவிடும்படி கங்கப்பாவை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். ஆனாலும் அவரால் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முடியவில்லை என தெரிகிறது. இதனால் கங்கப்பா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு கங்கப்பா தற்கொலை செய்துகொண்டார்.


நேற்று காலை கங்கப்பா தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து கல்கட்டகி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்