< Back
தேசிய செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரர்
தேசிய செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரர்

தினத்தந்தி
|
24 Jan 2023 3:17 AM IST

பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு போலீஸ்காரர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கொள்ளேகால்:

பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு போலீஸ்காரர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பணி இடமாற்றம்

ஹாசன் மாவட்டம் ராமனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். இவர் சாம்ராஜ்நகர் புறநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் மகேஷ் உள்பட 7 போலீசார் பணியில் அலட்சியமாக இருந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சாம்ராஜ்நகர் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், மகேஷ் உள்பட 7 போலீசாரை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இந்த பணி இடமாற்றத்தால் மகேஷ் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மகேஷ், சாம்ராஜ்நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார்.

தற்கொலை முயற்சி

அப்போது அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், விரைந்து வந்து மகேசின் உடலில் பிடித்த எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை, சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் மகேசின் கை, கால்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சாம்ராஜ்நகர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்