கிணற்றில் குதித்து மருத்துவ மாணவி தற்கொலை
|ஒசக்கோட்டையில் கிணற்றில் குதித்து மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர், கல்லூரி நிர்வாகம் கொடுத்த தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
கோலார் தங்கவயல்:
ஒசக்கோட்டையில் கிணற்றில் குதித்து மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர், கல்லூரி நிர்வாகம் கொடுத்த தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
மருத்துவ மாணவி
பல்லாரியை சேர்ந்தவர் தர்ஷினி(வயது 24). தந்தையை இழந்த தர்ஷினி, பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் மருத்துவப்பப்டிக்காக சேர்ந்தார். படிப்பில் மட்டுமல்லாது, தர்ஷினி விளையாட்டு போட்டிகளிலும் திறமையாக செயல்பட்டார். இந்த நிலையில் தர்ஷினிக்கு கல்லூரி நிர்வாகம் பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவி தர்ஷினி பல முறை கல்லூரியின் முக்கிய பிரமுகர்களிடம் புகார் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவி தர்ஷினி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த கோலார் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் தர்ஷினியின் சாவுக்கு கல்லூரி நிர்வாகம் தான் காரணம் என போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.