திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை
|மைசூருவில் திருநங்கை ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மைசூரு:
மைசூரு நகர் உதயகிரி போலீஸ் எல்லைக்குட்பட்ட கல்யாணகிரி பகுதியை சேர்ந்தவர் சாதிக் பாஷா என்ற ஷபா (வயது 24). திருநங்கையான இவர், தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் உதயகிரி பகுதியில் திருநங்கை சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு தான் தங்கி இருந்த வீட்டுக்கு வந்த ஷபா, திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் உதயகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் ஷபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்து ஷபா தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உதயகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.