< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் கணவர் சாக்லெட் வாங்கி கொடுக்காததால் பெண் தற்கொலை
தேசிய செய்திகள்

பெங்களூருவில் கணவர் சாக்லெட் வாங்கி கொடுக்காததால் பெண் தற்கொலை

தினத்தந்தி
|
8 April 2023 3:00 AM IST

பெங்களூருவில் கணவர் சாக்லெட் வாங்கி கொடுக்காததால் மனம் உடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் கணவர் சாக்லெட் வாங்கி கொடுக்காததால் மனம் உடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

சாக்லேட் வாங்கி கொடுக்கவில்லை

பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோமண்ணா லே-அவுட்டில் வசித்து வருபவர் கவுதம். இவரது மனைவி நந்தினி (வயது 30). கடந்த 6 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கவுதம் சலூன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு செல்லும் முன்பாக தனக்கு சாக்லெட் வாங்கி கொடுக்கும்படி கணவர் கவுதமிடம் நந்தினி கேட்டுள்ளார். ஆனால் அவர் சாக்லெட் வாங்கி கொடுக்காமல் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று முன்தினம் மதியம் தனது மனைவியின் செல்போனுக்கு கவுதம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் எடுத்து பேசவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் சந்தேகம் அடைந்த அவர் அருகில் வசிப்பவர்களை தொடர்பு கொண்டு வீட்டுக்கு செல்லும்படி கூறியுள்ளனர். உடனே அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது வீட்டின் படுக்கை அறையில் நந்தினி தூக்கில் தொங்கினார். அவருக்கு உயிர் இருந்ததால், அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நந்தினி பரிதாபமாக இறந்து விட்டார். தகவல் அறிந்ததும் ஹெண்ணூர் போலீசார் விரைந்து சென்று நந்தினி உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

விசாரணையில், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணமில்லை, நானே காரணம் என்று எழுதி வைத்திருந்தார். அதே நேரத்தில் கணவர் சாக்லெட் வாங்கி கொடுக்காததால் மனம் உடைந்த நந்தினி, இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து ஹெண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்