< Back
தேசிய செய்திகள்
கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
15 Jan 2023 12:15 AM IST

கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு குலசேகர் பகுதியில் லியாண்டர் வெர்னான் (வயது 17) என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்தான். அவன் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று அவனது பெற்றோர், உறவினர் வீட்டிற்கு சென்றனர். அப்போது லியாண்டர் வெர்னான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான். இந்த நிலையில் அவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு அவனது பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீடு உள்பக்கம் பூட்டு போடப்பட்டு இருந்தது.

இதையடுத்து அருகில் உள்ளவர்கள் உதவியுடன், கதவை உடைத்து அவர்கள் உள்ளே சென்றனர். அப்போது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதற்கிடையே அந்த பகுதியில் இருந்தவர்கள் கங்கநாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்