< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சம்பள பாக்கி கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை
|23 Dec 2022 12:15 AM IST
சம்பள பாக்கி கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சிக்கமகளூரு:
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா அரிசிகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மேசா(வயது 35). பொக்லைன் எந்திர டிரைவர். இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வாடகைக்கு தனது பொக்லைன் எந்திரத்தை ஓட்டி வந்தார். இந்த நிலையில் திம்மேசாவுக்கு, ஒப்பந்ததாரர் முறையாக சம்பளம் வழங்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, முறையாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் திம்மேசா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த குடும்பத்தினர், அவரது உடலுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தரிகெரே போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.