< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தொழில் அதிபர் தூக்கிட்டு தற்கொலை
|21 Sept 2022 12:15 AM IST
தொழில் அதிபர் தூக்குப்போடு தற்கொலை செய்து கொண்டார்.
உடுப்பி:
உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா கல்தோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவேந்திரா செட்டி(வயது 37). தொழில் அதிபர். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு ெவளியே சென்ற அவர், திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கப்சே பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ராகவேந்திரா பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பைந்தூர் போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் தொழில் நஷ்டம் ஏற்பட்டதால், ராகவேந்திரா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பைந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.