< Back
தேசிய செய்திகள்
மைசூருவில் கரும்பு விவசாயிகள் போராட்டம்
தேசிய செய்திகள்

மைசூருவில் கரும்பு விவசாயிகள் போராட்டம்

தினத்தந்தி
|
19 Sep 2023 6:45 PM GMT

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து மைசூருவில் பேராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

மைசூரு

காவிரி விவகாரம்

கர்நாடகா- தமிழகம் இடையே காவிரி விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை நடந்து வருகிறது. இந்தநிலையில் கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாத நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து 9 நாட்கள் வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைந்தது.

இதையடுத்து காவிரி நீர் திறந்து விடுவதை கா்நாடக அரசு நிறுத்தியது. இந்தநிலையில் காவிரி மேலாண்ைம ஆணையம் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

இதனால் கர்நாடகத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்

இ்ந்தநிலையில், தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு 3,834 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு ெதரிவித்து மைசூரு அரசு பஸ் நிலையம் முன்பு கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இதற்கு கரும்பு விவசாய சங்க தலைவர் குருபூரு சாந்தகுமார் தலைமை தாங்கினார்.

இதில், 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் கூறுகையில், தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கூடாது.

தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரை உடனே நிறுத்த வேண்டும். கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பு நிலவரத்தை மாநில அரசு காவிரி மேலாண்மைக்கு தெரிவிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு துரோகம்

அணைகளில் நீர் இல்லாத போதிலும் காவிரி மேலாண்மை குழு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.

அணைகளில் இருக்கும் நீர் கர்நாடக மக்களின் குடிநீருக்கே போதாது. எனவே கர்நாடக விவசாயிகளுக்கு துரோகம் செய்த துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த மைசூரு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

பரபரப்பு

பின்னர் அவர்களை வேனில் ஏற்றி சி.ஏ.ஆர். மைதானத்திற்கு அழைத்து சென்று மாலையில் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்