< Back
தேசிய செய்திகள்
கேரள தலைமைச் செயலகத்தில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து
தேசிய செய்திகள்

கேரள தலைமைச் செயலகத்தில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து

தினத்தந்தி
|
9 May 2023 4:32 PM IST

தொழில்துறை மந்திரி ராஜீவ் அலுவலகம் அருகே உள்ள கூடுதல் தனிச்செயலரின் அறையில் தீப்பற்றி எரிந்தது.

திருவனந்தபுரம்,

கேரள தலைமைச் செயலத்தில் உள்ள தொழில்துறை மந்திரியின் கூடுதல் தனிச்செயலர் அறையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. வடக்கு சாண்ட்விச் பிளாக்கில் உள்ள 3-வது தளத்தில் தொழில்துறை மந்திரி ராஜீவ் அலுவலகம் அருகே கூடுதல் தனிச்செயலர் அறையில் தீப்பற்றி எரிந்தது.

இது குறித்த தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், 2 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அலுவலகத்தின் மேற்கூரை, திரைச்சீலகைகள் ஆகியவை எரிந்ததாகவும், கோப்புகள் எதுவும் தீயில் சிக்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். குளிர்சாதனைப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்