< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இமாச்சலப்பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு
|13 Jan 2024 5:46 PM IST
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஷிம்லா,
இமாச்சலப்பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.16 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால், சம்பா மாவட்டத்தில் சில இடங்களில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.