திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் பக்தர்களிடையே திடீர் மோதல்
|திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் பக்தர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
திருமலை,
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் உரவகொண்டா மண்டலம் அமுதலா கிராமத்தைச் ேசர்ந்தவர் சுகதார். இவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அதேபோல் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வந்தனர். வைகுண்டம்கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்டுகளில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர். கம்பார்ட்மெண்டு திறந்ததும் பக்தர்கள் தரிசனத்துக்காக வரிசையில் சென்று கொண்டிருந்தனர்.
எஸ்.என்.சி.ஜெனரேட்டர் அருகில் சென்றபோது கூட்டநெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கூச்சலிட்ட மேற்கண்ட இரு தரப்பு பக்தர்கள் இடைேய வாய்த்தகராறு ஏற்பட்டது. திடீெரன ஒருவரை ஒருவர் தாக்கி ெகாண்டனர். அதில் சுதாகருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பக்தர்களை சமரசம் செய்து வைத்தனர். காயம் அடைந்த சுதாகரை மீட்டு சிகிச்சைக்காக திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார், இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். பின்னர் அவர்கள் சமாதானமாக செல்வதாக ஒப்புக்கொண்டனர். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.