< Back
தேசிய செய்திகள்
திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர்
தேசிய செய்திகள்

திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர்

தினத்தந்தி
|
21 Feb 2024 1:18 PM IST

இந்த சம்பவம் தொடர்பாக பெண் கான்ஸ்டபிள், எஸ்.பி.யை சந்தித்து புகார் அளித்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கவுரி பஜார் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் அங்கித் சிங். அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் கான்ஸ்டபிள் டியோரியாவிற்கும் அங்கித்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து டியோரியாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய அங்கித், அவரை பல முறை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் இருவரும் இணைந்து எடுத்து கொண்ட தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக அங்கித் மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக டியோரியா, எஸ்.பி. சங்கல்ப் ஷர்மாவிடம் புகார் அளித்துள்ளார். பெண் கான்ஸ்டபிள் அளித்த புகாரின் அடிப்படையில் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கவுரி பஜார் இன்ஸ்பெக்டர், அங்கித்தை சஸ்பெண்ட் செய்துள்ளார். அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் பெண் கான்ஸ்டபிள் டியோரியாவுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும் என்று இன்ஸ்பெக்டர் கூறினார். சப்-இன்ஸ்பெக்டர் அங்கித் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கவுரி பஜார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்