< Back
தேசிய செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான மறுதேர்வு பற்றி மந்திரி அரக ஞானேந்திரா புதிய தகவல்
தேசிய செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான மறுதேர்வு பற்றி மந்திரி அரக ஞானேந்திரா புதிய தகவல்

தினத்தந்தி
|
4 Aug 2022 2:27 AM IST

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான மறுதேர்வு பற்றி மந்திரி அரக ஞானேந்திரா புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவை, சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு எழுதியவர்கள் பெங்களூருவில் நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான மறுதேர்வை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு அரக ஞானேந்திரா, 'முறைகேடு புகார் எழுந்ததை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.


அதற்கு மறுதேர்வு நடத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். முறைகேடு குறித்து சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை முடிவடைந்த பிறகு அரசின் அறிவிப்பை வெளியிடும். ரத்தான தேர்வை எழுதிய 56 ஆயிரம் பேரும் மறுதேர்வில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள் ஆவர்' என்றார்.

மேலும் செய்திகள்