"கல்லூரிகளில் சேர்ந்து செப்.30-க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்" - யுஜிசி உத்தரவு
|அனைத்து பல்கலை., கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என அனைத்து பல்கலை., கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பின்னர் விலகும் மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும். செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் . செப். 30 மற்றும் அதற்கு முன் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களிடம் ரூ.1000 சேவை கட்டணம் மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும். என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
#JUSTIN : "ரூ. 1000 மட்டுமே... மாணவர்களின் முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்" - UGC அதிரடி#UGC #CollegeStudents #CollegeFeeshttps://t.co/nFF4441Evs
— Thanthi TV (@ThanthiTV) July 4, 2023