< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மன அழுத்தமின்றி தயாராக வேண்டும் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
|7 Sept 2022 3:25 PM IST
நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மன அழுத்தமின்றி தயாராக வேண்டும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ராஜ்கோட்,
ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் மாணவர்களிடையே மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நீட், சி.யு.இ.டி, ஜே.இ.இ (NEET, CUET, JEE)உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை இணைத்து ஒரே நுழைவுத் தேர்வாக அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை.
சி.யு.இ.டி தேர்வுடன் நீட், ஜே.இ.இ தேர்வுகளை இணைத்து ஒரே நுழைவுத்தேர்வாக அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மன அழுத்தமின்றி, தேர்வுக்கு நல்லமுறையில் தயாராக வேண்டும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தியுள்ளார்.