< Back
தேசிய செய்திகள்
ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலை..!
தேசிய செய்திகள்

ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலை..!

தினத்தந்தி
|
11 Oct 2022 3:45 AM IST

ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கவுகாத்தி,

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் குட்லா மகேஷ் சாய்ராஜ் (வயது 20). இவர் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பி.டெக். படிப்பு பயின்று வந்தார்.

இந்நிலையில் தான் தங்கியிருந்த விடுதி அறையில் நேற்று முன்தினம் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாணவர் குட்லா மகேஷ் மனஅழுத்தத்தில் இருந்துவந்ததாக தெரிகிறது. முழு விசாரணைக்குப் பிறகே அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறினர். பிரேத பரிசோதனைக்குப் பின், மாணவரின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், குட்லா மகேஷ் முன்னாள் மாணவர் என்றும், நன்கு படிக்காததால் அவரை ஏற்கனவே நீக்கிவிட்டதாகவும் ஐ.ஐ.டி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும், வளாக அளவிலும் விசாரணை நடத்தப்படும் என்றும் கவுகாத்தி ஐ.ஐ.டி. நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்