< Back
தேசிய செய்திகள்
காதலை ஏற்க மறுத்ததால் ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட மாணவன் - அதிர்ச்சி சம்பவம்
தேசிய செய்திகள்

காதலை ஏற்க மறுத்ததால் ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட மாணவன் - அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
5 May 2024 9:01 PM IST

காயங்களுடன் மீட்கப்பட்ட ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிஜ்னோய்,

உத்தர பிரதேசத்தில் காதலை ஏற்காத ஆசிரியை மீது முன்னாள் மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிஜ்னோய் நகரில் செயல்பட்டு வரும் தனியார் கோச்சிங் சென்டரில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் 28 வயது இளம்பெண் கோமல். அந்த கோச்சிங் சென்டரில் 21 வயதான பிரசாந்த் குமார் என்ற இளைஞர் முன்பு படித்துள்ளார்.

அப்போது ஆசிரியை கோமலை ஒரு தலையாக பிரசாந்த் காதலிக்க தொடங்கியுள்ளார். அதற்கு கோமல் பிடி கொடுக்காத நிலையில் ஆத்திரமடைந்த பிரசாந்த் கோச்சிங் சென்டரிலேயே வைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோமல் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மீரட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பிச் சென்ற பிரசாந்தை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்