< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பள்ளி இயக்குநர் தாக்கியதால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
|13 July 2024 3:21 AM IST
பள்ளி இயக்குநர் தாக்கியதால் மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் அனிஷ் தல்வி. இவர் சமூக வலைதளத்தில் தன்னுடன் பயிலும் மாணவி குறித்து ஒரு பதிவை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவர் அனிஷ் தல்வி உள்பட 3 மாணவர்களை அந்த பள்ளியின் இயக்குநர் ஆல்வின் ஆந்தோணி கண்டித்ததோடு, அவர்களை பள்ளியில் இருந்து நீக்கிவிடுவதாகவும் எச்சரித்துள்ளார். அப்போது அவர் மாணவர் அனிஷ் தல்வியை அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த மாணவர் அனிஷ் தல்வி, நிம்பாவலி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் இயக்குநர் ஆல்வின் அந்தோணியை போலீசார் கைது செய்துள்ளனர்.