< Back
தேசிய செய்திகள்
பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் சாவு
தேசிய செய்திகள்

பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் சாவு

தினத்தந்தி
|
26 July 2022 11:00 PM IST

ராய்ச்சூரில் பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்தான்.

ராய்ச்சூர்:

ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா கில்லரஹட்டி கிராமத்தை சேர்ந்தவன் மல்லிகார்ஜூன் (வயது 13). இவன் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் மல்லிகார்ஜூன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்வயரை அவன் மிதித்ததாக தெரிகிறது.

இதனால் மல்லிகார்ஜூன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து லிங்கசுகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்