< Back
தேசிய செய்திகள்
டியூஷனுக்கு சென்றபோது லிப்டில் சிக்கிக்கொண்ட சிறுவன்: என்ன செய்தான் தெரியுமா?
தேசிய செய்திகள்

டியூஷனுக்கு சென்றபோது லிப்டில் சிக்கிக்கொண்ட சிறுவன்: என்ன செய்தான் தெரியுமா?

தினத்தந்தி
|
22 Aug 2023 12:28 PM IST

அரியானாவில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் 2 மணி நேரமாக லிப்டில் சிக்கிக்கொண்ட 8 வயது சிறுவன் மீட்கும் வரை சிறிதும் பயமின்றி வீட்டுப்பாடம் செய்து வியப்பில் ஆழ்த்தி உள்ளான்.

கவுகாத்தி,

அரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 4-வது மாடியில் வசித்து வரும் 8 வயது சிறுவன் டியூஷனுக்காக கீழ் தளத்திற்கு செல்ல லிப்டை பயன்படுத்தி உள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் பழுதாகி அதில் சிறுவன் சிக்கிக் கொண்டான். இதனால் சிறுவன் கூச்சலிட்டுள்ளான், கத்தி உள்ளான் ஆனால் அவனது குரல் வெளியே கேட்கவில்லை. வெளியில் இருந்து எந்த பதிலும் வராததால், என்ன செய்துவது என்று யோசித்த சிறுவன் மீட்கும் வரை எந்த வித சலனமும் இன்றி வீட்டுப்பாடம் செய்துள்ளான். சுமார் இரண்டு மணி நேரம் லிப்டிலேயே இருந்துள்ளான்.

மகன் வீட்டிற்கு வராததை கண்ட தந்தை குடியிருப்பு பகுதியில் தேடி உள்ளார். அப்போது சிறுவன் லிப்டுக்குள் சிக்கிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து லிப்ட் பராமரிப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்தனர். தொடர்ந்து சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். மீட்கப்படும் வரை எவ்வித சலனமுமின்றி வீட்டு பாடம் செய்த சிறுவனை அங்கிருந்த குடியிருப்பாளர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்