< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு
|4 Nov 2023 12:23 AM IST
நேபாளத்தில் ஒரு மாதத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படுவது இது 3-வது முறையாகும்.
புதுடெல்லி,
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தில் ஒரு மாதத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படுவது இது 3-வது முறையாகும்.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி, பீகார்,பாட்னா உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது.