< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
"காலதாமதமாக அலுவலகம் வந்தால் கடும் நடவடிக்கை" -புதுவை அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை
|28 Oct 2022 8:26 AM IST
புதுச்சேரியில், அரசு அலுவலகங்களில் காலதாமதமாக வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில், அரசு அலுவலகங்களில் காலதாமதமாக வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புகார்கள் வந்ததை அடுத்து, அனைத்து துறைகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு நிர்வாக சீர்திருத்தத் துறை சிறப்புச் செயலர் கேசவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், காலதாமதமாக பணிக்கு வரும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்பதை துறைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் அடிக்கடி ஆய்வு செய்து, மாதந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.