< Back
தேசிய செய்திகள்
மாட்டிறைச்சி விற்றால் கடும் நடவடிக்கை; நகரசபை தலைவர் எச்சரிக்கை
தேசிய செய்திகள்

மாட்டிறைச்சி விற்றால் கடும் நடவடிக்கை; நகரசபை தலைவர் எச்சரிக்கை

தினத்தந்தி
|
21 July 2022 3:20 PM GMT

சிக்கமகளூரு நகரில், மாட்டிறைச்சி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு நகரசபையில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றும் 177 பேருக்கு தனித்தனியாக மொத்தம் ரூ.9.70 லட்சம் வரை தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் காப்பீடு செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இதனை அறிமுகப்படுத்தி சிக்கமகளூரு நகரசபை தலைவர் வரசித்தி வேணுகோபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிக்கமகளூரு நகரசபையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காப்பீடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சிக்கமகளூரு நகரில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சிக்காக கட்டிய கட்டிடங்களை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு வருகிறது. நகரில் எக்காரணத்தை கொண்டும் மாட்டிறைச்சி விற்பதற்கு அனுமதிக்கபடமாட்டாது.

அதையும் மீறி விற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிலர் சட்டவிரோதமாக நிலப்பட்டா இன்றி கட்டிய வீடுகளையும் இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிக்கமகளூரு நகரில் வாரத்திற்கு 2 வார்டுகளாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

எம்.ஜி.ரோட்டில் தள்ளுவண்டி வியாபாரிகள் அனைவரும் ஒரே இடத்தில் வியாபாரம் செய்யும் வகையில் இடம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணி முடிந்து விரைவில் வியாபாரிகளுக்கு வியாபாரத்திக்காக ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்