< Back
தேசிய செய்திகள்
தரமான ஆசிரியர்களை நியமிக்காத மருத்துவ கல்லுாரிகள் மீது கடும் நடவடிக்கை - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை
தேசிய செய்திகள்

தரமான ஆசிரியர்களை நியமிக்காத மருத்துவ கல்லுாரிகள் மீது கடும் நடவடிக்கை - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை

தினத்தந்தி
|
9 Dec 2022 10:43 PM IST

அரசு மருத்துவக் கல்லுாரியில் தரமான ஆசிரியர்கள் இல்லையெனில் அதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என மன்சுக் மாண்டவியா எச்சரித்துள்ளார்.

புதுடெல்லி,

தரமான ஆசிரியர்களை நியமிக்காத மருத்துவ கல்லுாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா லோக்சபாவில் தெரிவித்தார்.லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது;-

"நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லுாரிகளுக்கும் மத்திய அரசு ஆய்வுக்குழுவை அனுப்பி உள்ளது. அந்த குழுவினர் மருத்துவ கல்லூரிகளில் தரமான ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனரா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும்.

தரமான ஆசிரியர்களை நியமிக்காத மருத்துவ கல்லுாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும். அரசு மருத்துவக் கல்லுாரியில் தரமான ஆசிரியர்கள் இல்லையெனில் அதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும். தனியார் கல்லுாரிகள் என்றால் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். யார் முறைகேட்டில் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை பாயும்."

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்