< Back
தேசிய செய்திகள்
நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட எங்களுக்கு இல்லை; ஓவைசி கொந்தளிப்பு
தேசிய செய்திகள்

நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட எங்களுக்கு இல்லை; ஓவைசி கொந்தளிப்பு

தினத்தந்தி
|
9 Oct 2022 6:21 PM IST

நமது நாட்டில் நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட முஸ்லிம்களுக்கு இல்லை என்று ஓவைசி காட்டமாக கூறியுள்ளார்.

ஐதராபாத்,

நமது நாட்டில் நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட முஸ்லிம்களுக்கு இல்லை என்று ஓவைசி காட்டமாக கூறியுள்ளார். குஜராத்தில் கார்பா நிகழ்ச்சியின் போது கல் வீசியதாக போலீஸார் சிலரை தாக்கினர். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய ஓவைசி கூறியதாவது: - பாஜக ஆளும் இடங்களில் முஸ்லிம்கள் திறந்த சிறையில் தான் இருக்கிறோம். தெருநாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட முஸ்லிம்களுக்கு இல்லை. பிரதமர் மோடி குஜராத் சம்பவத்தை அறிந்த பிறகும் அமைதியாக இருக்கிறார்.

இது உங்கள் சொந்த மாநிலம் தானே. உங்கள் மாநிலத்தில் (குஜராத்தில்) முஸ்லிம்கள் ஒரு கம்பத்தில் கட்டிவைத்து அடிக்கப்படுகின்றனர். சுற்றி நிற்கும் கூட்டம் விசிலடித்து உற்சாகம் கொள்கிறது. தயவு செய்து கோர்ட், காவல்துறையை கலைத்து விடுங்க்ள்" என காட்டமாக பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்