< Back
தேசிய செய்திகள்
குடிநீரை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தினால் 5000 ரூபாய் அபராதம்.. பெங்களூரு நிர்வாகம் அதிரடி
தேசிய செய்திகள்

குடிநீரை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தினால் 5000 ரூபாய் அபராதம்.. பெங்களூரு நிர்வாகம் அதிரடி

தினத்தந்தி
|
8 March 2024 5:45 PM IST

பெங்களூரு மட்டுமின்றி, துமகுரு மற்றும் உத்தர கன்னட மாவட்டங்களின் சில பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிப்பதற்கு தவிர வேறு தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீரை வீணாக்கினால் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.ங

வாகனங்களை கழுவுதல், கட்டுமானம் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக குடிநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், திரையரங்குகள் மற்றும் மால்களில் குடிநீரை குடிப்பதற்கு தவிர பிற தேவைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கவும், மீண்டும் மீண்டும் விதிமுறைகளை மீறினால் ஒவ்வொரு முறையும் கூடுதலாக 500 ரூபாய் அபராதம் விதிக்கவும் பெங்களூரு குடீநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியம் முடிவு செய்துள்ளது.

1.3 கோடி மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில், மக்களின் அன்றாட தண்ணீர் தேவையில் 1,500 மில்லியன் லிட்டர் பற்றாக்குறை உள்ளது. ஒரு நாளைக்கு 2,600 மில்லியன் லிட்டர் முதல் 2,800 மில்லியன் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும்.

பெங்களூரு மட்டுமின்றி, துமகூரு மற்றும் உத்தர கன்னட மாவட்டங்களின் சில பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. ஒட்டுமொத்தமாக 236 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 219 தாலுகாக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்